திருகோணமலையில் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு
2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கைகள் மார்ச் மாதம் 17 முதல் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அதற்கான பயிற்சி செயலமர்வானது உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு இன்று(14) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலையில் அமைந்துள்ள விபுலானந்த கல்லூரியில் வாக்கெண்ணல் நடைபெற்றது.
பயிற்சி செயலமர்வு
இம்முறை, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களில் 129 நிலையங்களில் வாக்கெண்ணல் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சி செயலமர்வில் திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ். கே. டி. நிரஞ்சன் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 16 மணி நேரம் முன்
அமெரிக்க தடைகளை மீறி ரஷ்ய எண்ணெய் இறக்குமதி தொடரும் - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உறுதி News Lankasri
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri