மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி
பொது நிர்வாக உள்நாட்டு அலுவலகங்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் புதிதாக கிராம உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்றவர்களுக்கான மூன்று மாத பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது பொதுச் சேவை தேசத்தின் முன்னேற்றத்திற்கானது எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதசினி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று (10.06.2024) இடம்பெற்றுள்ளது.
பலதரப்பட்ட விடயங்கள்
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் கலந்து கொண்டு கிராம சேவையாளர்களின் பணிகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்தார்.

மேலும், புதிதாக நியமனம் பெற்ற பிரதேச செயலகப் பிரிவில் இவர்களுக்கு உரிய
கடமைகள், கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடைகள், அரசாங்கத்தின் திட்டங்களில்
பயனாளிகளை தெரிவு செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், காணிப்
பிணக்குகள், போதைப் பொருள் தடுப்பு, சுகாதார சேவைகள், கல்வி பயன்பாடுகள் என
பலதரப்பட்ட விடயங்களில் மூன்று மாத பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri