கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
புகையிரத கட்டணத்தை குறைக்கும் வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என பிரதி போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(29.03.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கட்டணத்தை குறைக்கும் வாய்ப்பு இல்லை
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,புகையிரத சேவை நஷ்டத்தில் இயங்குவதால், தற்போது கட்டண திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
எதிர்காலத்தில் சற்று நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விதமான எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணம் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையிலே புகையிரத கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.