ரயில் சேவைகள் மீள் அறிவிப்பு வரும் வரை ரத்து! - வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
இன்று முதல் மீண்டும் தொடங்கவிருந்த ரயில் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ( Kasun Chamara) தெரிவித்தார்.
அக்டோபர் 19ம் திகதி ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ரயில்கள் இயக்குவதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டாலும், மறு அறிவிப்பு வரும் வரை சேவை நிறுத்தப்படும் என்று கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ரயில் சேவைகளை நிறுத்துவதற்கான முடிவின் காரணத்தை சங்கம் ஆராயும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா (Shavendra Silva) அறிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீடிக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து 31 ஆம் திகதி வரையில் மாகாணங்களுக்கு இடையிலான தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan