விரைவில் நானுஓயாவிலிருந்து தொடருந்து சேவை ஆரம்பம்- வெளியான தகவல்
நானுஓயா - அம்பேவெல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் புகையிரத பாதை மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் நானுஓயா தொடருந்து நிலையத்தில் இருந்து அம்பேவெல வழியாக பதுளை வரை தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் செய்துள்ளதாக நானுஓயா தொடருந்து நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடருந்து சேவை ஆரம்பம்
மேலும், மலையக மார்க்கத்தின் டிட்வாவுக்கு முந்தைய வழக்கமான தொடருந்து சேவைகளை மீட்டெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இதற்கு தாமதம் என்னவென்றால் மலையக தொடருந்து பாதையின் மாத்திரம் 54 இடங்கள் மண்சரிவுகளால் கடுமையாகச் சேதமடைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, நானுஓயா தொடருந்து நிலையத்திற்கும் ஹட்டன் தொடருந்து நிலையத்திற்கும் இடையே தொடருந்து பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்குவது போல் உள்ளன. அவற்றை மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டமைப்பு பணிகளை எதிர்வரும் நாட்களில் துரிதமாக ஆரம்பித்து செய்து முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
துரிதப்படுத்தப்படும் புனரமைப்பு நடவடிக்கை
இதன்படி, கிரேட் வெஸ்டர்ன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் ஏனைய இடங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வீதி தாழிறங்கியுள்ளதால் பாலங்கள், புகையிரத நிலையங்கள், மற்றும் சமிஞ்சை கட்டமைப்புக்கள் மற்றும் பிரதான கட்டிடங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன.

நாட்டில் கடந்த வருடம் நிலவிய டிட்வா புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை - அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படுள்ளது.
தற்போது மலையக தொடருந்து மார்க்கத்தில் பதுளை - அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் பல தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும், இவ்வாறு வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத பேரழிவு ஏற்பட்டுள்ள மலையக தொடருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தொடருந்து பாதைகளை அவசரமாக மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் கருதி, தொடருந்து பாதையின் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புக்கு தொடருந்து திணைக்களம் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.



கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan