ரயில்களின் நாளைய பயணத்தில் ஏற்பட போகும் பாரிய மாற்றம்
தமது கோரிக்கைகைளை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாளை செவ்வாய்க்கிழமையன்று ரயில் சேவையில் தாமதம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையின் கீழ் ரயில்களுக்கான “வேக வரையறை கட்டளை” வழங்கப்படமாட்டாது என்று ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ரயில்வேயின் முகாமைத்துவம் இன்று அழைப்பு விடுத்திருந்த பேச்சுவார்த்தையை அதிபர் சங்கம் நிராகாித்துள்ளது.
தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படாதுபோனால், எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி முதல் சேவைகளில் இருந்து விலகியிருக்கப்போவதாகவும் ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அரச மற்றும் தனியார் நோயாளர் காவு வாகனங்கள், அதிவேக வீதிகளில் பயணிக்கும் போது அவற்றுக்கு கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது என்று பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.





புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ராணுவத்தைக் களமிறக்கும் பிரித்தானிய அரசு News Lankasri

விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri
