ஐந்து மாதங்களுக்கு நிறுத்தப்படும் மஹவ - யாழ்ப்பாணம் புகையிரத போக்குவரத்து
2023 ஜனவரி 15 முதல் ஐந்து மாதங்களுக்கு குருநாகலின் மஹவயிலிருந்து, யாழ்ப்பாணம் வரையிலான தொடருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பழுதடைந்த தொடருந்து பாதையை மீளமைக்கும் வரை சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பயணத்தை தொடர்வதில் சிரமம்
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் குணவர்தன, புகையிரத போக்குவரத்து முழுவதும் தொடர்ந்த போதிலும், தொடருந்து பாதை பாரியளவில் பழுதடைந்துள்ளதால், பயணத்தை தொடர்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உரிய பராமரிப்புப் பணிகளை 5 மாதங்களுக்குள் செய்து முடிப்பதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு சிறந்த தொடருந்து சேவையை வழங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 5 மாதங்களுக்குள் சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை
அமைச்சர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Red Card வாங்கி பிக்பாஸில் இருந்து வெளியேறிய கம்ருதீன், பார்வதி வாங்கிய சம்பளம்... யார் அதிகம் பாருங்க Cineulagam
Bigg Boss: அதிரடியாக கொடுக்கப்பட்ட ரெட் கார்டு... குற்ற உணர்ச்சியில் காலில் விழுந்த கம்ருதின் Manithan
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan