மூன்று மாதங்களின் பின்னர் மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடையிலான நேரடி புகையிரத சேவை ஆரம்பம்
மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடையிலான நேரடி புகையிரத சேவை இன்று காலை முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை 6.10 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து முதலாவது புகையிரதம் கொழும்பை நோக்கிப் புறப்பட்டுள்ளது.
அதேவேளை மாலை 3.15 மணிக்கு கொழும்பு புகையிரத நிலையத்தை சென்றடைந்துள்ளது.
இதேபோன்று கொழும்புக்கான இரவு நேர கடுகதி புகையிரத சேவை உட்பட அனைத்து சேவைகளும் இம்மாதம் 25ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளதாக புகையிரத நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இடை நிறுத்தப்பட்டிருந்த குறித்த மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடையிலான நேரடி புகையிரத சேவையானது இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam