சகல சேவைகளில் இருந்தும் விலகும் பொறுப்பதிகாரிகள்:நாளை முதல் ரயில் பயணங்கள் தடைப்படலாம்
தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் அனைத்து தொடரூந்து சேவைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
தமது கோரிக்கையை நிறைவேற்ற தொடரூந்து திணைக்களம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், தொழிற்சங்க நடவடிக்கை தீவிரப்படுத்த தீர்மானித்ததாக தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் சில தினங்களாக பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் எமது கோரிக்கை தொடர்பில் தொடரூந்து திணைக்கள முகாமைத்துவம் நழுவி சென்றுக்கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு முதல் பயணிகளுக்காக குறைந்த அளவிலேனும் தொடரூந்துகளை இயக்க தாம் தயாரில்லை என சங்கத்தின் தலைவர் சுமித் சோரத்ன (Sumith Somarathna) கூறியுள்ளார்.
இதன் காரணமாக சிரமங்களுக்கு உள்ளாகும் பயணிகள் குறித்து தாம் வருத்தமடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள், தொடரூந்து பயணச்சீட்டு விற்பனை செய்வதில் இருந்து விலகி இருக்கும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக தொடரூந்து திணைக்களத்திற்கு நாள் ஒன்றில் 80 முதல் 90 லட்சம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
