கொழும்பில் காருடன் மோதிய ரயில்! - இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு, கிருலபனை − பூர்வாராம ரயில் கடவையில், கார் ஒன்றுடன் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது, காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நுகேகொட ரயில் நிலையத்தில் இருந்து ரயில் கடவையை மூடுவதற்கு சரியான சமிஞ்சை வழங்காததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளது. கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் பணியாற்றும் குறித்த இரண்டு பெண்களும் மஹரகம பகுதியில் இருக்கும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.
ரயில் நெருங்கியதும் காரின் என்ஜின் செயலிழந்து, ரயில் காருடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் சுமார் 8 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri