தொடருந்து கட்டுப்பாட்டாளரின் தூக்க கலக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்
கொழும்பு- தெமட்டகொட பகுதியில் இன்று(27.09.2022) தொடருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
தெமட்டகொட பகுதியில் ருஹுனு குமாரி தொடருந்து கட்டிடமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தடம் புரண்ட தொடருந்து
குறித்த தொடருந்து, தெமட்டகொட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் இருந்து வெளியில் தடம் புரண்ட நிலையில், அந்த வளாகத்திலுள்ள பழைய கட்டிடமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
பராமரிப்பிற்காக கொண்டு வரப்பட்ட தொடருந்தே நிறுத்த வரம்பை தாண்டி சென்று பழைய கட்டிடத்தின் மீது மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்திற்கான காரணம்
தொடருந்து கட்டுப்பாட்டாளருக்கு உறக்கம் ஏற்பட்டமை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.