ஓமந்தையில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் பலி (PHOTOS)
வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் இன்றிரவு உயிரிழந்துள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் இரவு 10 மணியளவில் ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் பயணித்த போது புகையிரத பாதையில் இருந்த குடும்பஸ்தர் ஒருவரை மோதி தள்ளியுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் மரணமடைந்துள்ள நிலையில், சடலம் புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு, வவுனியா புகையிரத நிலையத்தில் வைத்து பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொலிஸாரால் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவத்தில் ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான எஸ்.நகுலன் என்பவரே மரணமடைந்துள்ளார்.


உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam