யாழில் உயிரிழந்த இரட்டை குழந்தைகள் : உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு.....
யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மற்றைய ஆண் குழந்தையும் உயிரிழந்தமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளவாலை தர்ஷன் அஸ்வின் (9 மாதங்கள்) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மரணத்திற்கான காரணம்
இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் குறித்த இரண்டு குழந்தைகளும் பிறந்த நிலையில் ஏப்ரல் மாதம் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

ஆண் குழந்தைக்கு நேற்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்ட நிலையில் குழந்தை மயக்கமுற்றுள்ளது.
இந்நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam