நீராடச்சென்ற மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்
காசல் ரி நீர்த்தேக்கத்தில் (castlereagh reservoir) நீராடச்சென்ற மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் காசல் ரி நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற வேளை மிகவும் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (18) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்தில் நோர்வூட் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
உறவினர்களுடன் நீராடச் சென்ற வேளையிலேயே குறித்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் வழமையாக நீர்த்தேக்கத்தில் நீந்தும் அனுபவம் உள்ளவர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவன் நீராடிக்கொண்டிருக்கும் போது திடீரென மாயமாகியுள்ளார். அதனை தொடர்ந்து நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து தேடுதலில் ஈடுபட்டு மாலை 6.30 மணியளவில் அவர் சடலமாக மீட்க்கப்பட்டதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இதன்போது உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்ட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |