இந்தியாவில் யாத்திரை சென்ற பக்தர்கள் 9 பேருக்கு நேர்ந்த பரிதாபம் : வெளியான அதிர்ச்சி தகவல்
இந்திய(India) மாநிலம் பீகாரில், காரில் பயணித்த கன்வார் யாத்திரை பக்தர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கன்வார் யாத்திரையானது வட மாநிலங்களில் புகழ்பெற்ற ஒன்றாக காணப்படுகின்றது.
இரங்கல் தெரிவிப்பு
இந்நிலையில் பீகார் மாநிலம் சோனாப்பூரில் உள்ள பாபா ஹரிகர்நாத் கோவிலில், பக்தர்கள் சிலர் ஜல அபிஷேகத்திற்காக காரில் பயணித்தனர்.
இதன்போது அவர்கள் சென்ற வாகனம் சுல்தான்பூர் கிராமத்தில் வைத்து எதிர்பாராத விதமாக மின்சாரக் கம்பிகள் அறுந்து வீழ்ந்தன.

இதில் காரில் இருந்த 9 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இருவர் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த துயர சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri