திருமண மண்டபத்தில் மணமகனுக்கு நேர்ந்த துயரம் - பரிதாபமாக உயிரிழப்பு
கேகாலை பிரதேசத்தில் சுப முகூர்த்தத்தில் இன்றைய தினம் திருமணம் செய்யவிருந்த இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்தில் மின்குமிழ் பொருத்துவதற்காக சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த எம்.பீ.பிரதிப் ரஞ்ஜன் குமாரசிங்க என்ற 30 வயதுடைய பட்டதாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கிய இந்த நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் நிறைவு செய்தவர் மாலைதீவில் 6 மாதம் பணியாற்றிய பின்னர் இலங்கை வந்து கொழும்பு தனியார் நிறுவனத்தில் தொழில் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் கேகாலை மாவட்டத்தில் ஆறாவது இடம்பெற்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு சென்று பட்டம் பெற்ற ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam