முல்லைத்தீவில் உழவு இயந்திரம் ஓட்டிச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட குரவில் பகுதியில் உழவியந்திரம் ஓட்டி சென்ற குடும்பஸ்தர் வலிப்பு வந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (01.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
வெள்ளப்பள்ளம் உடையார் கட்டுபகுதியினை சேர்ந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை குரவில் பகுதியில் உழவியந்திரத்தினை ஓட்டிசென்றுள்ளார்.
இதன்போது குறித்த நபருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உழவியந்திரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் உழவியந்திரம் குறித்த சாரதியின் மேல் ஏறி விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் பிரேதபரிசேதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
