நடுக்கடலில் கடற்றொழிலாளருக்கு நேர்ந்த விபரீதம்
நடுக்கடலில் படகிலிருந்து கடற்றொழிலாளர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(15.02.2026) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், ராமநாதபுரம் - தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் (55) என்ற கடற்றொழிலாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம்: இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு தங்க பிஸ்கட் - அம்பலமான விடயம்
இன்று காலை விசைப்படகில் கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்றவர், நடுக்கடலில் கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போது படகில் இருந்த ஜஸ்டின் கடலில் தவறி விழுந்து மாயமாகியுள்ளார்.
இதனையடுத்து, சக கடற்றொழிலாளர்கள் கடலில் குதித்து தேடிய போது, குறித்த நபர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடல் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுக்கு கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ராமேஸ்வரம் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan