திருகோணமலையில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பூட்டிக்குளம் பகுதியில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த வேளையில் குறித்த பெண் மோட்டார்சைக்கிளில் இருந்து பாய்ந்து படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் படுகாயமடைந்த பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டிலிருந்து கடைக்குச் சென்று வீட்டுக்கு மீண்டும் திரும்பி நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த அதே இடத்தைச் சேர்ந்த நபரொருவர் அப் பெண்ணை ஏற்றிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அப்பெண்ணின் வீட்டை தாண்டி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறிய நிலையில் குறித்த நபர் தனக்கு தேவைப்பட்ட விடயத்தை செய்து முடித்து விட்டு தன்னை வீட்டுக்கு அழைத்து வருவதாகவும், அப்பெண்ணிடம் கூறியதையடுத்து அப்பெண் பயத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்து உள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த பெண் பாய்ந்து காயமடைந்த நிலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கோமரங்கடவல பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ள நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
