இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு ஆபத்தான பொருள் ஏற்றுமதி: பொலிஸாரிடம் சிக்கிய கும்பல்
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்ப்பால் மற்றும் ஜெலி ஏற்றுமதி போர்வையில் கட்டாருக்கு அனுப்புவதற்கு தயார்படுத்தப்பட்ட போதைப்பொருள் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது.
200 கிராம் ஹெரோயின் மற்றும் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கணேமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கணேமுல்ல - திப்பொதுகொட பகுதியில் உள்ள வீடொன்றில் போதைப்பொருள் பொதி செய்து கொண்டிருந்த போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருட்கள் சோதனை
இதனையடுத்து சந்தேகநபரின் வீடு சோதனையிடப்பட்டுள்ளதுடன், சந்தையில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களில் தேங்காய் பால் பொதிகள் மற்றும் ஜெலி பக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, இந்த போதைப்பொருட்கள் கவனமாக பொதி செய்யப்பட்டுள்ளமையும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்... அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ Cineulagam
இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல் News Lankasri
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri