கிண்ணியா பிரதேசத்தில் போக்குவரத்து விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக விசேட சந்திப்பு
கிண்ணியா பிரதேசத்தில் போக்குவரத்து விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கிண்ணியா நகரசபை தவிசாளர் தலைமையில், பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் (2) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஒற்றை பக்கம் வாகன நிறுத்தத்தை அமுலாக்கல், பாடசாலை ஆரம்பிக்கும் போதும் விடுகை நேரமும் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்துக்கு தடைவிதித்தல் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
சட்ட விடயங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தல்
மேலும், தலைக்கவசம் அணிதல், மோட்டார் சைக்கிளில் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் பயணித்தல், அதிக வேகமாக வாகனத்தை செலுத்துதல் போன்ற விடயங்களில் இருக்கும் சட்ட விடயங்களை கடினமாக நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கும் நேரம், முடிவுறும் நேரங்களில் வீதிகளில் நின்று போக்குவரத்துக்கும், பயணிகளுக்கும் இடையூறுகள் ஏற்படுத்துவோரை கைது செய்து, அவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதோடு, இரவு 11 மணிக்கு பின்னர் பொருத்தமான காரணங்கள் இன்றி வீதிகளில் நடமாடுபவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
கழிவை விடுவோருக்கு எதிராக நடவடிக்கை
மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீதும் வீதிகளில் குப்பை போன்ற கழிவுகளை விடுகின்ற வர்த்தகர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு இந்த சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.
மேற்படி தீர்மானங்கள் அனைத்தும் எதிர்வரும் திங்கட் கிழமை 2025.05.04ஆம் திகதியிலிருந்து (திங்கட் கிழமை) நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.








ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 12 மணி நேரம் முன்

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
