சேவையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் விபத்தில் உயிரிழப்பு
ஹபரணை - திருகோணமலை (Trincomalee) வீதியின் கல் ஓயா சோதனைச் சாவடியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் டிப்பர் ரக வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம், நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ளது.
கந்தளே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதி கைது
கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று, லொறி மற்றும் கார் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் பொலிஸ் பரிசோதகர் படுகாயமடைந்த நிலையில் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும், காரில் இருந்த ஒரு பெண் மற்றும் நான்கு மாத கைக்குழந்தை, மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் லொறியின் சாரதி ஆகியோர் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இவ்விபத்து தொடர்பில் குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |