அரசியலில் இருந்து விலகும் மற்றுமொரு அரசியல்வாதி
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் லலித் எல்லாவல(Lalith Ellawala), தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கான முடிவை இன்று அறிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய நிலை குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், பாணந்துறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஒற்றுமை இல்லை. இது ஒரு பெரிய சர்வாதிகார கட்சியாக மாறியுள்ளது. வேலை செய்ய விரும்பும் எவருக்கும் அங்கு வேலை செய்ய அனுமதி இல்லை என்று லலித் எல்லாவெல தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்காலத்தில், அந்தக்கட்ச குழப்பமான மற்றும் சீரழிந்த நிலைக்கு செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த காரணங்களால், இன்று முதல் கட்சியில் இருந்தும் அரசியல் வாழ்க்கையில் இருந்தும் ஒதுங்கிக்கொள்வதாக எல்லாவல கூறியுள்ளார்.
ஏற்கனவே பொதுத்தேர்தலுக்கு முன்னர் பலர் அரசியலில் இருந்து தாம் ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |