கொழும்பில் விசேட போக்குவரத்துத்திட்டம்! சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்
கொழும்பில் இன்று நடைபெறவுள்ள 17 ஆவது தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வினை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
17 ஆவது தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு இன்று (19) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நாடாளுமன்ற விளையாட்டு மைதானத்தில் போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் நடைபெறவுள்ளது.
சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இவ்விழா நடைபெறும் காலப்பகுதியில் நாடாளுமன்ற வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்துத் திட்டம் குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கமைய, இன்று மாலை 3.30 மணி முதல் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலும், கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் கியஹேம் சந்தியிலும் கட்டுப்படுத்தப்பட்டு, பின்வரும் மாற்று வழிகளில் திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று வழிகள்
நாடாளுமன்ற வீதியூடாக கொழும்பிலிருந்து வெளியேற வரும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலிருந்து பத்தரமுல்லை, பாலன்துன, கியன்னேம் சந்தி ஊடாக பயணிக்க முடியும்.
கியன்னேம் சந்தியிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பாலன்துன, பத்தரமுல்லை ஊடாக பயணிக்க முடியும்.
ரஜமல்வத்த பகுதியிலிருந்து போதிராஜ மாவத்தை ஊடாக வரும் வாகனங்கள் பத்தரமுல்லை வீதியை வந்தடைந்து, தேவையான வீதி வழியே பயணிக்க முடியும்.
பேருந்துகள் மற்றும் லொறிகளை நிறுத்துவதற்கான இடங்கள்
ஜப்பான் நட்பு வீதி சந்தியிலிருந்து கிம்புலாவல சந்தி வரை.
ஜப்பான் நட்பு வீதி மின்சார சபைக்கு அருகிலிருந்து பெலவத்த வரை.
எனவே, இந்த நேரப்பகுதியில் நாடாளுமன்ற வீதியைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள வாகன சாரதிகள் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்ப்பதற்காக இந்த மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர் .
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam