கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை
போக்குவரத்து சட்டத்தை மீறி வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர கட்டளை பிறப்பித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட வீதி பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய மாநாட்டு மண்டபத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தின தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
72 பேர் பலி
அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தில் கடந்த 2024 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ம் திகதிவரை 611 வீதி விபத்தில் 72 பேர் உயிரிழந்ததுடன் 1975 மது போதையில் வாகனம் செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே 25ம் திகதி வரை 215 வீதி விபத்துக்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களுக்கு வேகமாக வாகனங்களை செலுத்தியமை மற்றும் மது போதையில் வாகனங்களை செலுத்தியமையே காரணங்களாக உள்ளன.
எனவே மாவட்டத்தில் கரையோரப் பிரதேசமான களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், ஏறாவூர், சந்திவெளி, வாழைச்சேனை, ஓட்டுமாவடி போன்ற பிரதேசங்களில் விபத்துக்கள் அதிகரித்துள்ளது. அதன் பிரகாரம் குறித்த பிரதேசங்களில் பெற்றோர்கள் தலைகவசம் அணிந்து கொண்டு பிள்ளைகளுக்கு தலைகவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் 3 பேரை ஏற்றிக் கொண்டு பிரயாணிக்கின்றனர்.
போக்குவரத்து சட்டத்திற்கு எதிரானது
அதேபோல தலைக்கவசம் இன்றி 3 பேருக்கு மேல் பிரயாணிப்பது போக்குவரத்து சட்டத்துக்கு ஏதிரானது. ஆகவே இவ்வாறு பிரயாணிப்பவர்களுக்கு தலைகவசம் அணியுமாறு 7 நாட்கள் கால அவகசம் வழங்குமாறும் அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக போக்குவரத்து பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கும். போக்குவரத்து சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான்.
எனவே போக்குவரத்து சட்டத்தை மீறி வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை குறித்த பிரதேசங்களில் வீதி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.
அதற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் அதனை மீறி நடைபாதையை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



