தொடர் மழையினால் முல்லைத்தீவில் போக்குவரத்து பாதிப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வீதிக்கு குறுக்க விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டத்தில் நேற்று (20) இரவிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது
இந்த மழையினால் பல தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
போக்குவரத்து முற்றாக துண்டிப்பு
இதில் குறிப்பாக வற்றாப்பளை மூன்றாம் கட்டை சந்தி வீதியுடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

குறித்த வீதியில் தேசிய நீர் வளங்கல் வடிகால அமைப்பு சபைக்கு சொந்தமான குழாய் கிணறு அமைக்கப்பட்ட பகுதி ஒன்றுக்கு அருகில் நின்ற மரம் ஒன்று வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளது.
இதனால் இந்த வீதியூடான போக்குவரத்தும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam