கொழும்பில் குறைந்த மக்கள் நடமாட்டம்! இதுதான் காரணம்
கொழும்பில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும் பல பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கொழும்பில் தங்கியிருக்கும் மக்கள் பண்டிகைக்காக தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளமையே இதற்கு காரணமாகும்.
இந்நிலையில் கொழும்பின் காலி முகத்திடல் பகுதியில் மயில்கள் சுதந்திரமாக நடமாடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
வாகன நெரிசல்
இருப்பினும், தெற்கு அதிவேக வீதியில் காலி நோக்கி செல்லும் வீதியில் இன்று (14) கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


