மன்னாரில் தமிழர் மரபுசார் உணவு கொண்டாட்டம்(Photos)
தமிழரின் பாரம்பரிய உணவுகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் முகமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பெண்கள் குழுக்களால் இயற்கை உணவு காட்சிப்படுத்தல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சிப்படுத்தல் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலியா எய்ட் நிறுவனத்தின் நிதி ஒழுங்கமைப்பில் நேற்றையதினம் (27.05.2023) ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள மாதர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட 500 மேற்பட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் மாதர் ஒன்றிய இளைஞர் குழுவினரால் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
ஊக்குவிப்பு பரீசில்கள்
அதே நேரம் மாதர் ஒன்றியத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தோட்ட செய்கையை சிறப்பாக
மேற்கொண்ட பெண்களுக்கான ஊக்குவிப்பு பரீசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல், சிறப்பு விருந்தினராக மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் ,பெண்கள் ஒன்றிய செயற்பாட்டாளர்கள் கிழக்கு பல்கலைகழக விரிவிரையாளர்கள், முஸ்லிம் மாதர் அபிவிருத்தி ஒன்றிய குழுவினர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |














