நுவரெலியாவில் அரிசி விற்பனையிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ள வர்த்தகர்கள்
தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிடின், அரிசி விற்பனையிலிருந்து விலகியிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கொட்டகலை - ஐக்கிய வர்த்தகர்கள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
நுவரெலியா, கொட்டகலையில் இன்று(06.01.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு கொட்டகலையில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் சிவப்பரிசிக்கான உட்சபட்ச சில்லறை விலையாக 220 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு விலை
எனினும் தங்களுக்கு சிவப்பரிசி மற்றும் வெள்ளையரிசி ஒரு கிலோகிராம் 295 ரூபாய் என்ற மொத்த விலையில் புறக்கோட்டை சந்தையில் கிடைக்கப்பெறுகிறது. இவ்வாறான பின்னணியில், எங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாது.
அத்துடன், இறக்குமதி செய்யபட்ட ஒரு கிலோகிராம் அரிசி 235 ரூபாவுக்கு மொத்த விலையில் கொள்வனவு செய்யப்படுவதுடன், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுடன் ஒப்பிடும் போது உரிய விலையில் விற்பனை செய்ய இயலாது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
