மக்கள் நலனில் தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும்: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு
தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அதேயளவு முக்கியத்துவத்தை சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் செயலகத்தில் இன்று(02.07.2025) அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தில் புதிய பதவிநிலை உருவாக்கம் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கைகள்
அத்துடன் சிற்றூழியர்களுக்கான பதவி உயர்வுகள்இ சிற்றூழியர் வெற்றிடங்களை நிரப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத் துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை என்ற விடயம் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


