சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கும் தொழிற்சங்கத்திற்குமிடையில் விசேட சந்திப்பு (Photos)
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கும், மன்னார் மாவட்ட மட்ட தொழிற்சங்கத்திற்குமிடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த மாதம் எட்டாம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது முன்வைத்த கோரிக்கை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
இதில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளரும் கலந்து கொண்டிருந்தார்.
பணிப்பாளரின் வருகையின் பின்பு மன்னார் மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தேசிய ரீதியாகப் பல வெற்றிகளை பெற்ற விடயத்தைப் பணிப்பாளர் நாயகத்திற்கு முன்வைத்தனர்.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.










தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
