மலையக மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஹட்டனில் கையெழுத்து வேட்டை
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட காணியை பெறுவதற்கு தகுதி உடைய அனைவருக்கும் நில உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனை வலியுறுத்தி ஹட்டன் பேருந்து நிலைய வளாகத்தில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
கையெழுத்து போராட்டம்
உரிமை மீட்போம், தலைமுறை காப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இதற்குரிய நிகழ்வில் அமைப்பின் தலைவர் பா. சிவநேசன் உட்பட பல சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

“பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு நிலம் மற்றும் வீடுகளை வழங்குவது மிகவும் அவசியமானது. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் முன்னேறும். கையெழுத்து திரட்டப்பட்ட பின் மனு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்." என்று பா. சிவநேசன் தெரிவித்தார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri