திருகோணமலையில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருட்டு: விசாரணை முன்னெடுப்பு(Video)
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை-கண்டி பிரதான வீதி ஆண்டாங்குளம் பகுதியில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று(16) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வர்த்தக நிலையத்தைச் சுற்றிப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பி வலை வெட்டப்பட்டு கதவும் உடைக்கப்பட்டு உள்நுழையப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தக நிலையத்தில் சிகரெட் மற்றும் பணம் போன்றவை திருடப்பட்டுள்ளதாகக் கடை உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸாரின் உதவியுடன் கைரேகை நிபுணர்களின் உதவியுடனும் தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.




பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri