யாழில் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் மேம்பாடு கருத்துரை நிகழ்வு (Photos)
யாழில் வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறைகள் மேம்பாடு தொடர்பிலான கருத்துரை நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு நேற்று (21.10.2023) மணிக்கூட்டுக்கோபுர வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றத்தின் தலைவர் கே.பூரணச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் "வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறைகள் மேம்பாடு" என்கிற தலைப்பில் சமூக பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின் இரேனியஸ் கருத்துரை வழங்கினார்.
கைத்தொழில் முயற்சியாளர்கள்
வடக்கின் சிறிய, நடுத்தரக் கைத்தொழில் முயற்சியாளர்கள், வர்த்தகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
தொடர்ந்தும் எமது முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கூட்டாக
எதிர்கொள்வது தொடர்பிலும், தொழில் முயற்சியோடு தொடர்புடைய பல்வேறு அரச,
தனியார் துறை வல்லுனர்களையும் எதிர்காலத்தில் அழைத்து உரையாடல் நடாத்துவது
தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இப்படியான வர்த்தக மேம்பாடு ஆலோசனைகள் அதனூடாக துறைசார் அனுபவங்களை பெற்றுக் கொள்வதன் மூலம் தங்களது தொழில் முயற்சிகளை மேலும் விரிவாக்கி கொள்ள உதவிக்கரமாக இருக்கும் என இந்நிகழ்வில் பங்கேற்ற முயற்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
