சுனாமியின் சுவடு! 17 வருடங்கள் கழித்தும் துயரத்தில் மக்கள் (Video)
கூத்துக் கலையை மங்கவிடாமல் பாதுகாக்க வேண்டும் என செயற்பட்டு வருகின்றேன். என்ன செய்வது இதனால் எனக்கு கிடைக்கும் வருமானம் போதாது. ஏப்போதாவது ஒரு தரம்தான் என்னை கூத்துப் பழக்க யாராவது அழைப்பார்கள். அவர்கள் அப்போது சிறியளவில் அவர்களால் இயன்ற பணம் தருவார்கள். எனினும் நான் இன்னும் வேறுயாரிடமும் இருந்து எதுவும் கேட்பதுமில்லை என இராசையா தருமராசா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நான் ஒரு அண்ணாவியார். கிழக்குப் பல்கலைக்கழகம், இசை நடனக்கல்லூரி மற்றும் ஆலயங்கள், கழகங்கள், உள்ளிட்ட பலவற்றிற்கும் சென்று கூத்து, நாடகங்கள் போன்றவற்றைப் பழக்கி வந்தேன். அதிலிருந்து வரும் வருமாத்தைக் கொண்டுதான் எனது குடும்பத்தையும் பாதுகாத்தும் வந்தேன்.
இவ்வாறு எனது குடும்பம் நகர்ந்து கொண்டிருந்தவேளை கடந்த 2004.12.26 ஆம் திகதி தடீரென வந்த சுனாமி அனர்த்தத்திற்கு உட்பட்டு, குடும்பத்திலிருந்து நானும் எனது திருமணமாகாத மகளும், திருமணமான மகளின் கணவரான எனது மருமகனும், தெய்வாதீனமாக உயிர் பிழைத்தோம்.
பின்னர் அந்த மகளுக்கு திருமணம் செய்துவைத்தேன், அவளுக்கு 2 ஆண் பிள்ளைகள். இந்நிலையில் நோய்வாய்ப்பட்டு அவளும் இறந்துவிட்டாள். இப்போது நான் மாத்திரம்தான் மீதமாகவுள்ளேன். தற்போது அனைத்தையும் இழந்து தனிமையில் ஆதாரமின்றி வாழ்ந்து வருகின்றேன்.
அரசாங்கத்தால் வருடத்திற்கு ஒருதடவை 10,000 ரூபா தருகின்றார்கள், அதனால் நான் எவ்வாறு வாழ்வது. நான் உடைந்த வீட்டில் வாழ்ந்தாலும், அதுவும் இரவல் வீடாகத்தான் உள்ளது.
எமது நாவடி கிராமத்தில் அரச காணி உள்ளது. அதில் சிறிய வீடொன்றாவது கட்டித்தந்தால் நான் உயிர் வாழும் வரைக்குமாவது நிம்மதியாக வாழ்ந்து விட்டுப்போவேன்.
சுனாமியில் நூறுவீதம் பாதிக்கப்பட்ட வீட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்து வரும் இந்நிலையில் அது மீண்டும் எப்போது விழும் எனத் தெரியாதுள்ளது.
இங்கு எனது வாத்தியக் கருவிகளை வைத்துவிட்டுப் செல்வதனால் உரிய பாதுகாப்பின்மையால், நாய் இழுத்துக் செல்கின்றன. எமது கிராமத்தில் 5 பேர்ச் காணியிலாவது ஒரு சிறிய பாதுகாப்பான வீடொன்றை யாராவது அமைத்துத் தருவர்களேயானால் அது அவர்களுக்குப் பெரும் புண்ணியமாப்போகும்.
திருமணம் செய்வதற்கு முன்பிருந்து எனக்குத் தெரிந்த ஒரே ஒரு தொழில் அண்ணாவியார் தொழில்தான். எனக்கு தற்போது 68 வயது பழையபடி ஓடி ஆடி செயற்படுவது கடினமாகவுள்ளது. தற்போது மழை காலம் இனி வருகின்ற தை மாத்திலிருந்து மீண்டும் யாராவது என்னைக் கூப்பிட்டால் அங்கெல்லாம் சென்று எனக்குத் தெரிந்த கூத்துக் கலையை மங்கவிடாமல் பாதுகாக்க வேண்டும் என செயற்பட்டு வருகின்றேன்.
என்ன செய்வது இதனால் எனக்கு கிடைக்கும் வருமானம் போதாது. ஏப்போதாவது ஒரு தரம்தான் என்னை கூத்துப் பழக்க யாராவது அழைப்பார்கள் அவர்கள் அப்போது சிறியளவில் அவர்களால் இயன்ற பணம் தருவார்கள். எனினும் நான் இன்னும் வேறுயாரிடமும் இருந்து எதுவும் கேட்பதுமில்லை.
எனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் இழந்து தனிமனிதராய் இந்த உலத்தில் வாழ்ந்து வருகின்றேனா? என நான் நினைத்துப் பார்ப்பதும் உண்டு. ஆனால் எனக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. எனக்கு வீடு வளவு ஒன்று தருமாறு பலமுறை சம்மந்தப்பட்ட அரச அதிகாரியிடம் தெரிவித்துள்ளேன். தருவோம், தருவோம் என தெரிவிக்கின்றாரே! தவிர இன்றுவரை எதுவித பலனும் கிடைக்கவிலை.
எனவே அரசாங்கமோ அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களோ, அல்லது புலம்பெயர்ந்து வாழும் யாராவது என்மீது கருணை கூர்ந்து, இந்த உலகில் நான் உயிர்வாழும் வரைக்குமாவது பிறரிடம் கையேந்தாமல் வாழ்ந்ததுபோல் தொடர்ந்து எனது கலைத் தொழிலை செய்து வாழ்வை மேற்கொண்டு செல்வதற்கு எனது தொழிலுக்கு உதவ முன்வரவேண்டும் என்பதோடு, எனக்கு சிறிய வீடு ஒன்றை அமைத்து எனது நின்மதியான வாழ்வுக்கு உதவுமாறு இரு கரம் கூப்பி வேண்டுகின்றேன் என கூறியுள்ளார்.
சுனாமி தாக்கமுற்று 17 வருடங்கள் கழிந்துள்ள இந்நிலையில் தருமராசா போன்று இன்னும் பல தருமராசாக்காள் ஆங்காங்கே வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறானவர்களைத் தேடிக் கண்டு பிடித்து அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்ய துறைசார்ந்தவர்கள் துரித கதியில் செயற்பட வேண்டும் என்பதுவே மக்களின் வேண்டுகோளாகும்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
