இலங்கையர்களுக்கு டொயோட்டா நிறுவனம் விடுத்த எச்சரிக்கை
இலங்கையர்களுக்கு டொயோட்டா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, இந்நாட்களில் டொயோட்டா வர்த்தக நாமத்தைப் பயன்படுத்தி இலவச டொயோட்டா கார்கள், பரிசுகள் மற்றும் பெறுமதியான சலுகைகளை வழங்குவதாக விளம்பரங்கள் பதிவிடப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவிடப்பட்டுள்ள விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தப்படும் போட்டிகள் டொயோட்டா லங்கா நிறுவனத்திற்கு தெரியாமல் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மற்றும் நபர்களால் மேற்கொள்ளப்படும் மோசடியான செயற்பாடுகளாகும் என டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்தகைய அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் அல்லது நபர்களால் நடத்தப்படும் போட்டிகளுக்காக செய்யும் நிதி பரிவர்த்தனைகளுக்கு டொயோட்டா லங்கா நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்று நிறுவனம் மேலும் கூறுகிறது.
இது தொடர்பில் மேலும் விபரங்கள் அறிய 0112939000 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

எல்லையைக் கடந்து கனடாவுக்குள் நுழையமுயன்ற புலம்பெயர்வோர்: கனேடிய பெண் கண்ட கலங்கவைத்த காட்சி News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
