சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பதிவான மாற்றம்
மே மாதத்தின் முதல் 10 நாட்களில் 46,606 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து 18,533 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையில் 40வீதம் ஆகும்.
சுற்றுலாப் பயணிகளின் மொத்த வருகை
மேலும், இந்தக் காலகட்டத்தில் சீனாவிலிருந்து 3,472 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,517 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,441 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

மேலும், 2026 ஜனவரி 1 முதல் மே 10 வரை சுற்றுலாப் பயணிகளின் மொத்த வருகை 922,883 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில், 208,451 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 74,628 பேர் ரஷ்யாவிலிருந்தும், 91,362 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வந்தனர் என்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri