இலங்கையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 600,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 623,651 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 115,772 பயணிகள் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள்
பிரித்தானியாவில் இருந்து 66,164 பயணிகளும், ரஷ்யாவில் இருந்து 56,114 பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 45,939 பயணிகளும், சீனாவில் இருந்து 39,725 பயணிகளும் வருகைத் தந்துள்ளனர்.

இவர்களைத் தவிர பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மேலும், மார்ச் மாதத்தின் முதல் 11 நாட்களில் மாத்திரம் 66,996 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 21 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan