வடக்கில் யுத்தத்தின் வடுக்களை புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்
வடக்கு நோக்கி படையெக்கும் சுற்றுலா பயணிகள், யுத்தத்தின் வடுக்களை தாங்கிய நிலையில் காணப்படும் பனை மரங்களையும் கட்டிடங்களையும் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
நோர்வே நாட்டின் V.G.J மற்றும் கொட்லன்ட் உயர்தர பாடசாலைகளின் மாணவர்கள் நேற்று(7) முகமாலை பகுதிக்கு விஜயம் செய்தனர். இதன்போதே, அவர்கள் யுத்தத்தின் வடுக்களை புகைப்படம் எடுத்துள்ளனர்.
கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யுத்தம் நிலவிய பிரதேசமாக காணப்பட்ட கிளிநொச்சி முகமாலை பகுதியில் மக்கள் மீள் குடியேறி 15 ஆண்டுகள் கடந்துள்ளன.
குறிப்பாக இந்தப் பிரதேசத்தில் குண்டுகள் துளைக்கப்பட்ட கட்டடங்கள், சின்னாபின்னமாக்கப்பட்டு சிதைக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் குண்டுகளால் துளையிடப்பட்டும் குண்டுத்துகழ்களை தாங்கியும் உள்ள பனைமரங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
ஆவணமாக்கப்பட்ட வடுக்கள்
இந்நிலையில், வடக்கு நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த பிரதேசத்தில் உள்ள பனை மரங்களில் ஏற்பட்ட குண்டுகளையும் குண்டு பிசினையும் பார்த்து ஆவணமாக்கி உள்ளனர்.
யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்தாலும் யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் மாறவில்லை.
நோர்வே நாட்டின் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் யுத்தத்தால் சேதமடைந்த பனைமரத்தில் இருக்கின்ற எச்சங்களை பார்த்து வியப்படைந்தனர். அவர்களின் அலைபேசிக்குள் அவற்றை அடையாளப்படுத்திக் கொண்டனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களுக்கு தற்காலிக வீட்டுத்திட்டம்,மலசல கூடம்,கிணறு மற்றும் வீட்டுத்தோட்டம் செய்வதற்கான உதவிகளை FORUT/RAHAMA நிறுவனம் வழங்கி வருகின்றது.
குறித்த நிறுவனத்திற்கு பிரதானமாக நிதி வழங்கிவரும் நோர்வே நாட்டில் உள்ள V.G.J மற்றும் கொட்லன்ட் உயர்தர பாடசாலைகளின் மாணவர்கள் தங்களுடைய நாட்டில் இருந்து நிதி அனுப்பி போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்ககு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
மேலதிக தகவல் - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
