இலங்கையில் குவியப்போகும் சுற்றுலா பயணிகள்: ரணில் விடுத்துள்ள உத்தரவு - செய்திகளின் தொகுப்பு
இலங்கைக்கு வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் நேற்று முன்தினம் (16.08.2023) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடியதும், சிறந்த சுற்றுலா வசதிகளைக் கொண்ட இடமாகவும் இலங்கையை மாற்றுவதற்கான குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தற்போது முன்னெடுக்கும் திட்டங்கள் மற்றும் தனியார்துறையின் பங்களிப்பு குறித்து அதிகாரிகளிடம் ஜனாதிபதி கேட்டறிந்ததோடு, நடைமுறைச் செயற்பாடுகள் மற்றும் புதிய நிலவரங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
