இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
மே மாதத்தில் இதுவரை மொத்தம் 91,785 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன.
அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 31,635 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது 34.5வீதமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மே மாதத்திற்கான சமீபத்திய புள்ளிவிவரங்கள்
மேலும், மே மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,195 பேரும், சீனாவிலிருந்து 6,043 பேரும், ஜெர்மனியிலிருந்து 5,526 பேரும், பங்களாதேஷிலிருந்து 4,693 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையில், மே மாதத்திற்கான சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 988,669 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 188,694 பேர் இந்தியாவையும் 109,840 பேர் ரஷ்யாவையும் 93,248 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
