நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
நுவரெலியாவில் (Nuwara Eliya) 2025ஆம் ஆண்டுக்கான வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த முதலாம் திகதி (01) ஆரம்பமானது.
இதனை தொடர்ந்து நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
பிரதான நுழைவாயில் சோதனை சாவடி
தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் சித்திரை புத்தாண்டு பண்டிகை விடுமுறையை கழிப்பதற்காகவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையையொட்டி நுவரெலியாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணமாக உள்ளனர்.
குறிப்பாக நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரி செய்வதற்கும், மட்டக்குதிரையில் சவாரி செய்வதற்கும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நுவரெலியா மாநகரசபையின் ஏற்பாட்டில் இம்மாதம் 30ஆம் திகதி வரை தினந்தோறும் கலை கலாசார விளையாட்டு போட்டிகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் நுவரெலியா - பதுளை, நுவரெலியா - கண்டி நுவரெலியா - ஹட்டன் போன்ற பிரதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரதான நுழைவாயில் சோதனை சாவடி மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் கூடுதலான எண்ணிக்கையில் பொலிஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
