சீகிரிய மற்றும் பொலனறுவை ஆகிய பகுதிகளுக்கு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்வதற்கு தடை
வெளிநாட்டவர்களினால் சீகிரிய மற்றும் பொலனறுவை ஆகிய பகுதிகளுக்கு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த சுற்றுலாப் பயணிகள் சீகிரிய மற்றும் பொலனறுவை ஆகிய சுற்றுலா தளங்களுக்கு விஜயம் செய்துள்ளனர்.
குறித்த வெளிநாட்டுப் பிரஜைகள் சீகிரிய மற்றும் பொலனறுவை பகுதிகளுக்கு விஜயம் செய்யும் நேரங்களில் உள்நாட்டுப் பயணிகள் சுற்றுலா மேற்கொள்ளக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் பொலனறுவைக்கும், நாளை மறுதினம் நண்பகல் 12 மணி வரையில் சீகிரியாவிற்கும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.