மன்னாரில் சுற்றுலா வலயம் திறந்து வைப்பு
மன்னார் (Mannar) மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட 'அருவி ஆறு சுற்றுலா வலயம்' நேற்று (8) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் பத்திநாதன் மற்றும் வடமாகாண சுற்றுலாத்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள், நானாட்டான் பிரதேச சபை செயலாளர் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள்
இதன் போது அருவியாறு சுற்றுலா வலய பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அதனை தொடர்ந்து தொங்கு பாலமும் திறந்து வைக்கப்பட்டது.

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் பகுதிக்கு வடக்கு மற்றும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும்,புலம்பெயர் நாடுகளில் இருந்தும் நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் மற்றும் அருவி ஆறு ஆகியவற்றை பார்வையிடுவதற்காக வந்து செல்வது வழமை.
வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு குறித்த சுற்றுலா வலயம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 




 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        