இலங்கைக்கு வந்த ஐரோப்பிய நாட்டவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
இலங்கைக்கு வந்த ஒஸ்ரியா நாட்டை சேர்ந்த நபரின் பணப்பை திருடப்பட்டு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
Niko Osives Hamer என்பவர் கடந்த 29ஆம் திகதி கொஸ்லந்த பிரதேசத்தில் இருந்து எல்ல பகுதிக்கு படகில் சென்று கொண்டிருந்த நிலையில், வெல்லவாய நகருக்கு வந்த போது அவரது பணப்பை காணாமல் போயுள்ளது.
7000 ரூபாய் ரொக்கம்,2 கடன் அட்டைகள் காணப்பட்டுள்ளன. அந்த அட்டைகளின் கணக்குகளை சரி பார்த்த போது, 2 முறை அட்டையில் 50000 ரூபாயும், 2 லட்சம் ரூபாயும் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 29ஆம் திகதி ஒஸ்ரியா நாட்டை சேர்ந்த நபர் வெல்லவாய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வெல்லவாய பொலிஸார், வெல்லவாய எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் அட்டையை கொடுத்து எரிபொருள் பெற்றுக் கொண்ட போது சந்தேக நபரை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்த பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
