யாழில் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா பயணி: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த பத்து இளைஞர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டிலிருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும் யாழ்.காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
கைது சம்பவம்
கசூரினா கடற்கரை பகுதியில் மதுபோதையில் இருந்த 10 இளைஞர்கள் குறித்த இருவரையும் தகாத வார்த்தையால் பேசியதுடன் குறித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடமிருந்து சிரமத்துடன் தப்பிச்சென்ற இருவரும் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஊர்காவற்றுறை பொலிஸார் 10 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
அடையாள அணிவகுப்பு
குறித்த இளைஞர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றில் பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்களில் இருவரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியுள்ளார்.
இந்நிலையில் 10 இளைஞர்களையும் எதிர்வரும் செப்டெம்பர் 26 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
இலங்கையில் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா பயணி: வலுக்கும் எதிர்ப்பு |


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri
