வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த தம்பதி மீது கொடூர தாக்குதல்
சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த தம்பதி மீது பெந்தோட்டை பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கவனம் செலுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பணி இடைநீக்கம்
இந்த சம்பவத்தில் சுற்றுலா வழிகாட்டிகள் குழுவொன்று ஈடுபட்டுள்ளதாகவும், விசாரணை முடியும் வரை அவர்களை பணி இடைநீக்கம் செய்யுமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலாத்துறையானது இவ்வாறான சம்பவங்களினால் பாரிய பாதிப்புக்குள்ளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாத்தியமான நடவடிக்கை
அவற்றை இல்லாதொழிப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.