கொழும்பில் ஐரோப்பிய பிரஜை ஒருவரின் விபரீத முடிவு
ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த பிரஜை ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலங்கம, கொஸ்வத்த பகுதியில் தனியாக வசித்து வந்த ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவரே உயிரை மாய்த்துள்ளார்.
67 வயதான இயன் பிரணன் நபரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். இரண்டு மாடி வீடொன்றில் தனியாக வசித்து வந்த குறித்த நபர் நிதி நெருக்கடி தொடர்பில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் இலங்கைக்கு வந்து அங்குள்ள தனியார் நிறுவனமொன்றில் சிரேஷ்ட முகாமையாளராக பணிபுரிந்து வந்ததாகவும் 2019 ஆம் ஆண்டு மனைவி உயிரிழந்ததையடுத்து வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரால் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இறந்தவர் தனக்கு ஸ்கொட்லாந்தில் சொத்து இருப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளிநாட்டு கரன்சி கிடைக்காததால் மனமுடைந்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் திருவிழா




