பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி கைது
மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதி தம்பலகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(28) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுளையிலிருந்து நிலாவெளிக்கு சுற்றுலா வந்த மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
கைது
நிலாவெளியில் தமது சுற்றுலாவை முடித்துக்கொண்டு பதுளை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த குறித்த பேருந்தில் ஐம்பது மாணவர்களும் ஆசிரியர்களும் பயணித்துள்ளனர்.
இதன்போது, தம்பலகாமம் வீதிப் பாதுகாப்புப் பொலிஸார் சாரதியை வழிமறித்துச் சோதனையிட்டபோது, அவர் மதுபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி சாரதி உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணை
தற்போது மாணவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
