நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டிற்கு இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 15 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை இலங்கைக்கு 1,517,296 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதேவேளை, ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 173,878 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள்
ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 41,781 ஆகும்.

இரண்டாவதாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்துள்ளனர் (18,197 பயணிகள்). மூன்றாவதாக சீனாவிலிருந்து 11,368 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர் (380,011 பயணிகள்).
அதிகரிப்பு
மூன்றாவதாக சீனாவிலிருந்து 11,368 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர் (380,011 பயணிகள்).
மேலும், இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தது பெப்ரவரி மாதத்திலாகும். (279,328 பயணிகள்).